பொன்னி நதி பாக்கணுமே… ஏ.ஆர்.ரஹ்மானால் அப்செட் ஆன ஃபேன்ஸ்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:49 IST)
மணிரத்னம் இயக்கி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முதல் சிங்கிள் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சரித்திர படம் “பொன்னியின் செல்வன்”. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பொன்னி நதி” பாடல் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் சில விமர்சனங்களையும் பாடல் சந்தித்துள்ளது.

தமிழில் “பொன்னி நதி” பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத ஏ.ஆர்.ரஹ்மானே பாடி இசையமைத்திருக்கிறார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் இந்த பாடலுக்கும், பாடலில் சூழலுக்கு ஏற்றதாக இல்லை என பொ.செ ரசிகர்கள் பலரே முகம் சுளித்துள்ளனர். சிலர் இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் ஈர்க்கும்படி இல்லை என்றும், வைரமுத்து எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும் தமிழ் தவிர பிற மொழிகளில் பாடல் சிறப்பாக உள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த ட்ரால் மீம்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்