இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, இன்று மாலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, பாடியும் உள்ள “பொன்னி நதி” பாடல் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.