அடடா..! ரஜினி - விஜய்க்கு என்ன ஒரு ஒற்றுமை

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (08:21 IST)
பேட்ட ரஜினிக்கும் தளபதி 63 க்கும் ஒருவிதமான ஒற்றுமை  நிலவிவருகிறது 


 
நடிகர் விஜய் சர்க்கார் திரைப்படத்தைத் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லியின் அடுத்தப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். 
 
இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது இதன் ப்ரீ புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக வேகமாக நடந்து வருகிறது.
 
தளபதி 63- யில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி கதாபாத்திரத்திற்கு விவேக் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படத்தில் புரொடக்‌ஷன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன் சமீபத்தில் அட்லீயை சந்தித்துள்ளார்.
 
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, தளபதி 63-யில் சுரேஷ் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக டிரெண்ட் செய்தனர். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய உண்மைத் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்