அஜித், விஜய் இருவரும் எனக்கு ஒன்றுதான் : யோகி பாபு அசத்தல் பேச்சு - ரசிகர்கள் உருக்கம்...

சனி, 22 டிசம்பர் 2018 (11:38 IST)
தற்போது தமிழ சினிமாவில் வளந்து வரும் முக்கியமான காமெடி நடிகர் யோகி பாபு. தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அஜித்துடன் விவேகம் படத்திலும், விஜயுடன் சர்கார் படத்திலும் நடித்து எல்லோரது கவனத்தையும் பெற்றார்.
அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களைப் பற்றி யோகிபாபு கூறியதாவது:
 
’அஜித், மற்றும் விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களுமே  எனக்கு ஒன்றுதான். அவர்களை என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை . இருவரிடமும் நிறைய அனுபவம் உள்ளது. நான் சிறிய நடிகராக இருந்தாலும் அவர்கள் என்னைப் பக்கத்தில் அழைத்து உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.
 
இரண்டு பேருடன் படத்தில் நடிக்கும் போதும், அவர்களை நான் கலாய்க்கிற மாதிரி வசனங்கள் வந்தால் அதை மனதார ஏற்றுக்கொண்டு பெருந்தன்மையாக சிரித்தபடி இருந்து விடுகிறார்கள். ’இவ்வாறு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்