இன்று தொடங்கியது விக்ரம்- பா ரஞ்சித் படத்தின் டெஸ்ட் ஷூட்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (16:22 IST)
இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

இந்த படம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறித்து பேசும் கதைக்களன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் டெஸ்ட் ஷூட் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்