”ஜோடியா ரீல்ஸ் பண்றிங்களோ..?” வேறு நபருடன் ரீல்ஸ் செய்த மனைவிக்கு வெட்டு!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:34 IST)
சென்னையில் பெண் ஒருவர் வேறு ஒரு ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்ததால் கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தொலைதொடர்பு வசதிகள் அதிகரித்து விட்ட நிலையில் மக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலரும் தங்களது பெரும்பான்மையான நேரத்தை ஷார்ட்ஸ், ரீல்ஸ் உள்ளிட்ட சிறு வீடியோக்களை செய்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம் ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு.

சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த சில காலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய ஈஸ்வரி அதில் ரீல்ஸ் செய்து வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

ALSO READ: 11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. ஈஸ்வரியில் ரீல்ஸ் மோகத்தால் ஆத்திரமடைந்த சாலமன் அவரை வெட்டியுள்ளார்.

இதனால் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயங்களுடன் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலமன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்