சிம்புவை அடுத்து சாந்தனுவுக்கு சான்ஸ் கொடுத்த கெளதம் மேனன்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (10:37 IST)
இளம் தலைமுறையின் காதல், பாசம், நேசம், வலி முதலானவற்றைப் படமாக்குவர்களில் ஒருவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரவர் ஸ்டைலை தங்கள் படங்களில் கல்வெட்டுகள் போல் பொறித்தார்கள். ‘இது இன்னாருடைய படம்’ என்று முத்திரை பதித்தார்கள். அந்தவகையில், முத்திரை பதித்த இயக்குனர் பட்டியலில் சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

இவரது இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக் என்ற கேரக்டரில் சிம்புவும், ஜெஸ்ஸி என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த கேரக்டர்கள் இன்னும் பல காதலர்கள் மனதில் கூடி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த லாக்டவுன் நேரத்தில் இதே ஜோடியை வைத்து மீண்டும் ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். வெறும் 12 நிமிடங்கள் கொண்ட    இந்த ஷார்ட் பிலிமில் சிம்பு (கார்த்திக்) - திரிஷா (ஜெஸி) கேரக்டரில் நடித்து மீண்டும் காதலில் கரைய வைத்தனர். இதையடுத்து தற்போது நடிகர் சாந்தனு - மெகா ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இதன் முழு பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்