பயம் இன்னும் அதிகரிக்குது: சாந்தனுவின் சந்தோஷமான அறிக்கை

வியாழன், 21 மே 2020 (13:10 IST)
கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு மற்றும் அவருடைய மனைவி நடிப்பில் ’கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் யூடியூபில் வெளியானது. இந்த குறும்படத்திற்கு ஒரு சில நாட்களில் 7 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு சாந்தனு பாக்யராஜ் நன்றி கலந்த வணக்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது
 
*மரியாதக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும்‌ அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌ ஷாந்தனு - கிக்கியின்‌ நன்றி கலந்த வணக்கம்‌
Its better to Light one candle than to curse the darkness. இது என் அப்பவோட லெட்டெர்பேட்ல வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம்‌. கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள்‌, பல்வேறு துறையைச்‌ சேர்ந்த நிறைய விஐபிக்கள்‌ விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள்மூலம்‌ பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டூருக்காங்க. என்‌ பங்குக்கும்‌ சின்னதாக ஒரு நல்ல விஷயம்‌ பதிவு பண்ண யோசிச்சேன்‌.
 
பாக்யராஜ்‌ புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட்‌ பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான்‌ பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும்‌ அம்மாவையும்‌ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்துமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம்‌ யோசனை பண்ணி கிக்கியுடன்‌ சேர்ந்து, டேட்சன் பிக்சர்ஸ் என்னும்‌ பெயரில்‌ வீட்டு லைட் வெளிச்சத்துல செல்போன்லயே அதை எடுத்து கொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல்‌” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை 16.05.2020 மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப்‌ சேனலில்‌ வெளியிட்டேன்‌ (லேசான விவரிங்குடன்‌). ஆனா அது உங்க பேராதரவுனாலயும்‌ மரியாதைக்குரிய தமிழ்‌ மக்கள்‌ பேராதரவுனாலயும்‌ ஒரு பெரிய மரியாதையை வாங்கிக்‌ குடூத்துருச்சு. இதுவரைக்கும்‌ 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும்‌ பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம்‌, கடமை உணர்ச்சியோட மீண்டும்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எங்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்‌.
 
இவ்வாறு சாந்தனு பாக்யராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்