கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தனு கொஞ்சம் Corona Naraiyya காதல் என்ற குறும்படத்தை இயக்கி மனைவி கிகியுடன் நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த குறும்படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டு நைஸ் நல்லா இருக்கு... முழுப்படத்தையும் பார்த்து ரசித்தேன் என பாராட்டினாராம்.