கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் எனும் படத்தில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டும் வருகிறார் என்றும், இந்த படத்தில் சிம்பு தான் ஹீரோ என்றும் பிரபலம் ஒருவர் யூடியூபில் கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் கமல் ரசிகர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.,
தக்லைஃப் முழு படமும் சிம்பு கேரக்டரை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாகவும், இவர்தான் உண்மையான கதாநாயகன் என்றும், படக்குழுவினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆனால் கமல்ஹாசனுக்கு காதல் கதாபாத்திரமே இல்லை. அதோடு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர், “இரண்டு நாயகிகளும் எனக்கு ஐ லவ் யூ சொல்லவே இல்லை,” என சிறிது நகைச்சுவையாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படத்தின் கதையில் சிம்புவுக்கே மேலதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென, கமல்ஹாசனே நேரில் போய் மணிரத்னத்திடம் பரிந்துரை செய்ததாகவும், அதன் விளைவாக, இந்தப் படத்தில் கமல்ஹாசனைவிட சிம்புவுக்கு அதிகமான காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஹீரோ என கூறப்பட்டாலும், பக்த பாசில், விஜய்சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருந்தது போல் தக்லைஃப் முழுக்க முழுக்க சிம்புவின் படமாகவே பார்க்கப்படுகிறது.