பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (16:35 IST)
நடிகர் அஜித்துகு 2025 ஆம் ஆண்டு பல நல்ல விஷயங்களைக் கொடுத்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் தோல்வி அடைந்த போதும் குட் பேட் அக்லி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இனிமேல் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துவிட்டு ஆறு மாத காலம் ரேஸ்களில் அவர் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ஏற்கனவே துபாய் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் அவரது அணி கலந்துகொண்டது.

அடுத்து பெல்ஜியத்தில் நடக்கவுள்ள பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளது. அதற்கான பயிற்சியில் அவரது அணி ஈடுபட்டு வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்குமார் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். நல்வாய்ப்பாக அவருக்கு இந்த விபத்தில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்