நரகாசூரன் திரைப்படத்தை கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள்… ரிலீஸில் மேலும் சிக்கல்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:57 IST)
நரகாசூரன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் மூன்றாண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.

இது சம்மந்தமாக கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. ஆனாலும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கௌதம் மேனனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த படம் எப்போது ரிலிஸாகும் என ஆர்வம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் தமிழில் புதிதாக கால்பதிக்கும் சோனி லைவ்வில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் படத்தை வாங்க நெருங்கியபோதுதான் அதில் பல சிக்கல்கள் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த சிக்கல்களை தீர்க்க முடியாததால் அவர்கள் படத்தை வெளியிடும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மற்றொரு ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸை படக்குழு அணுக, அவர்களும் வெளியிட மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்