பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்…. எங்கே? எப்போது?

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:53 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்  வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஐதராபாத் செல்லும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்