என்ன ஆனது நரகாசூரன் ஓடிடி ரிலிஸ்? சிக்கலுக்கு மேல் சிக்கல்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (10:26 IST)
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் திரைப்படம் சில ஆண்டுகளாக ரிலிஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிறது.

தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் மூன்றாண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.

இது சம்மந்தமாக கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. ஆனாலும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கௌதம் மேனனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த படம் எப்போது ரிலிஸாகும் என ஆர்வம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் தமிழில் புதிதாக கால்பதிக்கும் சோனி லைவ்வில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் இப்போது அந்த படம் ரிலிஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. இதுபற்றி விசாரித்ததில் படத்தை ரிலீஸ் செய்வதில் உள்ள சட்டப்பூர்வ பிரச்சனைகள் பற்றி இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் சில வாரங்களில் அது முடிந்துவிட்டால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்