போன வாரம் பெண்கள், இந்த வாரம் ஆண்கள்: நீயா நானா'வுக்கு என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (16:27 IST)
விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் போன வாரம் தமிழ் பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது



 
 
இந்த நிலையில் இந்த வார 'நீயா நானா' நிகழ்ச்சியின் தலைப்பு என்ன தெரியுமா? ஆண்கள் அழலாம்! vs அழக்கூடாது' இந்த தலைப்பில்தான் இந்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது.
 
போன வாரம் பெண்கள் நிகழ்ச்சி என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு மறைமுகமாக பழிவாங்கவே இந்த வாரம் விஜய்டிவி ஆண்களுக்கான தலைப்பை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவும் விஜய் டிவியின் புரமோ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்