கார்த்தி ஜோடியாக பிரியா பவானி சங்கர்?

திங்கள், 23 அக்டோபர் 2017 (12:14 IST)
கார்த்தி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


 


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

சீரியலையும் விட்டு விலகிய பிரியா, வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்