ரிலீஸுக்குத் தயாராகும் நயன்தாராவின் அடுத்த படம்!!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (19:18 IST)
நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், அதர்வா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், நயன்தாராவின் கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இந்தப் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. தற்போது ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்