நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (11:09 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். படம் நேற்று பெருமழைக்கு இடையே ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இந்நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான நயன்தாரா படத்துக்குக் கிடைக்கும் ஓப்பனிங்கை விட இது மிகக் குறைவு என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்