இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.