சமந்தா நடித்த வெப்சீரிஸை பாராட்டிய நாக சைதன்யா!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (09:47 IST)
நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின.

ஆனால் விவாகரத்துக்குப் பின்னர் நாக சைதன்யாவுக்கு திரையுலகில் மந்தமாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் படங்கள் வரிசையாக ப்ளாப் ஆகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த வெப் தொடர் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா சமந்தா நடித்த பேமிலி மேன் தொடர் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்