கோல்டன் டிக்கெட்டை வென்று நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் நபர் இவர் தான்!

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக டிக்கெட்  ஃபைனாலே நடைப்பெற்று வருகிறது.  இதில் நேரடியாக ஃபைனலுக்கு செல்வதற்காக போட்டியாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டாஸ்களை செய்து வந்தனர். நேற்று இறுதி டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


 
இதுவரை டாஸ்கை சரியாக செய்து முகன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லொஸ்லியா பின்னர் கடைசி இடத்தில் கவின் இருக்கிறார்கள். இதில் கடைசி இடத்தில இருக்கும் கவின் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. எனவே கோல்டன் டாஸ்கில் முகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. 
 
ஏற்கனவே 41 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருந்த முகன் நேற்றைய மிதி வண்டி மிதித்தல் டாஸ்கில் ஒரு புள்ளி கூடுதலாக 42 புள்ளிகள் பெற்று முதலித்தை பிடித்துவிடுவார் என யூகிக்கப்பட்டு வருகிறது. எனவே அநேகமாக முகன் நேரடியாக ஃபைனலுக்கு சென்றுவிடுவார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்