அரசியல்வாதிகளை வெளுக்கும் விஜய் சேதுபதி! - சங்கத்தமிழன் அதிரடி ட்ரெய்லர்

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (20:25 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ராஷி கண்ணா, நிவேதா பேத்துராஜ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். விவேக் – மெர்வினின் அசத்தலான இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் தயாராகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் ட்ரெய்லரே படத்தின் மீது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.

பரோட்டா சூரி தனது வழக்கமான ஆடம்பரமற்ற நகைச்சுவையால் கவர்கிறார். ட்ரெய்லரை பொறுத்தவரை கண்ணியமான, அதிரடி காட்டும் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி வலம் வருகிறார். கிராமத்து பெண்ணாக நிவேதா பேத்துராஜ், மாடர்ன் சிட்டி மங்கையாக ராஷி கண்ணா ஈர்க்கிறார்கள்.

கவன் படத்திற்கு பிறகு அரசியல்வாதிகளை நேரடியாக எதிர்த்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் மக்கள் செல்வனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அக்டோபர் ரிலீஸ் என்று அறிவித்துள்ளார்கள். ரசிகர்கள் தீபாவளிக்கு சரவெடியாய் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்