வித்தியாசமான தலைப்பில் மிர்ச்சி சிவாவின் அடுத்த படம்… கவனம் ஈர்த்த போஸ்டர்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (09:02 IST)
மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் கவனம் ஈர்த்தவர் மிர்ச்சி சிவா. சென்னை 28, தமிழ்ப்படம் மற்றும் கலகலப்பு ஆகிய படங்களின் மூலம் முன்னணி கதாநாயகனான அவர் தொடர்ந்து நகைச்சுவைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் இடியட் திரைப்படம் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது சிவா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. படத்துக்கு “சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும்” என தலைப்பு வைத்துள்ளனர். இதுபோலவே படத்தின் போஸ்டரும் கவனம் ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்