தன்னுடைய அடுத்த படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!

vinoth
புதன், 17 ஜூலை 2024 (16:09 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் என சொல்லப்படுகிறது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார்.

இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்