வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

vinoth

வெள்ளி, 5 ஜூலை 2024 (15:35 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். பாலிவுட் படங்களில் நடிப்பதால் அவர் இப்போது மும்பையிலேயே நிரந்தமாக செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தமன்னா மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனக்கு சொந்தமாக இருந்த மூன்று அபார்ட்மெண்ட்களை அடமானமாக வங்கியில் வைத்து கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் பெற்றுள்ளாராம். வீடுகளை அடமானம் வைத்துவிட்டதால் அவர் தற்போது வாடகைவீட்டுக்கு செல்ல உள்ளாராம். அந்த வீட்டுக்கான வாடகை சுமார் 18 லட்சமாம். அந்த வீட்டுக்கு அவர் ஐந்துவருட காலம் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்