தமன்னா, சாந்த் சா ரோஷன் செஹரா என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் சினிமாவின் இன்றைய நிலை குறித்து பேசியுள்ள அவர் “ஒரு காலத்தில் சினிமா தியேட்டர்களில் மட்டும் காட்டப்பட்டது. இப்போது ஓடிடியிலும் மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ரசிகர்கள் ரீல்ஸ் பார்த்து அதற்குப் பழகி வருகின்றனர். அவர்களை ஈர்க்கும் விதமாக நடிப்பது நடிகர் நடிகைகளுக்கு கடினமாகி வருகிறது. சொல்லப்போனால் ரீல்ஸ் வீடியோக்கள் நடிகர்களுக்கு ஒரு போட்டியாக உருவாகி வருகிறது” எனக் கூறியுள்ளார்.