உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

vinoth

வியாழன், 4 ஜூலை 2024 (09:50 IST)
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இயக்குனர் தமிழ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை. இப்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் இயக்குனர் தமிழ், அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இதற்காக ராமநாதபுரத்தை களமாகக் கொண்டு ஒரு பீரியட் கதையை தமிழ் எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த கதை இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. கார்த்தி சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்