மங்காத்தா படத்தில் அஜித் அணிந்த செயினுக்குப் பின் இப்படி ஒரு ரகசியமா? உண்மையைப் பகிர்ந்த ஆடை வடிவமைப்பாளர்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:09 IST)
மங்காத்தா படத்தில் அஜித் அணிந்திருக்கும் செயின் பற்றி அந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமானப் படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபுவையும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. அந்தப் படத்தில் அஜித் அணிந்திருக்கும் செயின் ஒன்று வித்தியாசமாக இருக்க, அது ரசிகர்களைக் கவர்ந்து அது போல பலரும் அதை அணிய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அந்த செயின் திரைப்படத்துக்குள் வந்த கதையைப் பற்றி அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ‘இயக்குனர் படப்பிடிப்புக்கு ஒரு நாளுக்கு முன்பாக ஹீரோ அணிந்திருக்கும் டாலர் கிளைமேக்ஸில் முக்கியப் பங்காற்றும் விதமாக இருக்கும் எனக் கூறினார். கதாநாயகன் ஒரு போலிஸ் என்பதால் நாங்கள் கைவிலங்கு போன்ற செயின் நன்றாக இருக்கும் என முடிவு செய்து, அதை வடிவமைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்