சூரியும் சூர்யாவும் செய்துவரும் ஒரே வேளை – வெற்றிமாறன் என்ன செய்யப் போகிறார்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (17:59 IST)
வெற்றி மாறன் அடுத்து சூரி நடிக்கும் படத்தை இயக்குவாரா அல்லது சூர்யாவின் படத்தை இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியானது. அந்த படம் மீரான் மைதீன் என்ற எழுத்தாளர் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யாவை வைத்து இயக்கும் வாடிவாசலுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதலில் அவர் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றிமாறன் படத்துக்காக சூரி மற்றும் சூர்யா இருவருமே இப்போது தாடி வளர்த்து வருவதாகவும், அதனால் வெளி உலகில் தலைகாட்டுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்