பாலிவுட்டில் மாதவன் படத்தில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:14 IST)
பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக அறியப்பட்ட மஞ்சுவாரியர் திலிப்பை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். பின்னர் how old are you படத்தின் மூலமாக் ரி எண்ட்ரி கொடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் வெளுத்து வாங்கி வருகிறார். தமிழில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பாலிவுட்டில் மாதவன் நடிப்பில் கல்பேஷ் இயக்கும் அமெரிக்கி பண்டிட் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இதை சமீபத்தில் அவரே உறுதி செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்