ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். அதன் பிறகு அவர் இயக்கிய வெயில் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஆனால் அதற்குப் பின்னர் அவர் இயக்கிய அரவான் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவர் இப்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அர்ஜுன் தாஸைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.