தமிழ் சினிமாவில் எனக்கு இவர்தான் போட்டி.. பிரபலத்திடம் மம்மூட்டி பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2025 (09:32 IST)
பிரபல எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியதன் மூலம் மேலும் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். அதன்பின்னர் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

மலையாள நடிகரான மம்மூட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பவா செல்லதுரை சமீபத்தில் அவரை சந்தித்ததாகவும் தமிழ் சினிமா பற்றி இருவரும் பேசியதாகவும் கூறியுள்ளார். அந்த சந்திப்பில் “எனக்குப் போட்டியாளராக நான் நினைக்கும் தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம்தான்” என மம்மூட்டி தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி, கமலோ அதுபோல மலையாள சினிமாவில் மம்மூட்டி, ஆனால் அவர் ரஜினி கமலை போட்டியாக சொல்லாமல் குரு சோமசுந்தரத்தை சொல்லி இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக அமைந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்