தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் தன்னுடைய அடுத்த தமிழ் படம் பற்றி பேசியுள்ளார். வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும், அதில் ரவி மோகன் (ஜெயம் ரவி) கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.