50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மாமன்னன் திரைப்படம்.. மேடையில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:33 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் நாயகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலினிடம் படத்தின் வசூல் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “படம் வெளியாகி 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது” எனக் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் படம் ஒன்று வசூல் செய்த அதிகபட்ச தொகையாக இந்த படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்