தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர், பா. ரஞ்சித்துடன் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த நிலையில், பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின்னர், தனுஷ் நடிப்பில், கர்ணன் படத்தை இயக்கினார். இப்படமும் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து, உதயநிதி நடிப்பில் மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் அடுத்ததாக லைப் இஸ் பியூட்டி என்ற இத்தாலியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும், இப்படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாகவும், இப்படம் வித்தியாசமான கோணத்தில் தன்னை வெளிப்படுத்தும் என்று வடிவேலு கூறியுள்ளார்.