இந்தி ரசிகர்களுக்காக வருகிறது ‘லவ் டுடே’- அதிகாரப்பூர்வமாக அறிவித்த ப்ரதீப்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:35 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் பற்றிய அப்டேட்டை நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.  இந்தி ரீமேக் உரிமையை பேந்தம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்