இந்த நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா' படத்திற்கு மட்டும் வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஜோதிகா படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை, சத்தம் இரைச்சலாக உண்பதை உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பெண்களை கேலி செய்யும் இரட்டை அர்த்த வசனம் கொண்ட படங்களுக்கு கூட எதிர்மறை விமர்சனங்கள் வருவதில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் ஏனெனில் நான் முன்பு பார்த்த மிகப்பெரிய அறிவுக்கு மாறான பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்றவற்றுக்கு எல்லாம் இந்த அளவுக்கு யாரும் விமர்சனம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.