தற்போது மத்திய திரைப்பட தணிக்கை திரைப்படங்களுக்கு யு, ஏ மற்றும் யுஏ ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் அளித்து வரும் நிலையில் இனி யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+ ஆகிய பிரிவுகளில் சான்றிதழ்கள் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
யூ வகை திரைப்படங்கள் அனைவரும் பார்க்கும் படங்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படங்களுக்கு ஏ வகை சான்றிதழும் வழங்கப்படும், அதேபோல் 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கும் வகையில் யுஏ7+, “யுஏ 13+, யுஏ 16+ என அந்தந்த வயதைப் பொறுத்து சான்றிதழ் வழங்கப்படும்
ஒரு படத்தைப் பார்க்க குழந்தைகளை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன், அப்படத்தின் சான்றிதழ் விவரத்தை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது.