100 கோடி வசூல் சாதனை செய்த லவ் டுடே… அதிகாரப்பூர்வமாக அறிவித்த ப்ரதீப் ரங்கநாதன்!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:09 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 100 ஆவது நாள் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான ப்ரதீப் “லவ் டுடே 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது.” என அறிவித்துள்ளார்.

மேலும் தன் படத்தில் அறிவுரை சொல்பவர்களை எல்லாம் பூமர் என்று கலாய்த்த ப்ரதீப் இந்த நிகழ்ச்சியில் அட்வைஸ் மழை பொழிந்து பேசியது இணையத்தில் ட்ரோல்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்