பணத்தால் பழிச்சொல்லை மறைக்கப் பார்க்கிறாரா கவிஞர் வைரமுத்து?

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (15:01 IST)
பணத்தால் பழிச்சொல்லை மறைக்கப் பார்ப்பதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக, கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது காட்டமாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர் இந்து மத வெறியர்களும், பாஜகவைச் சேர்ந்தவர்களும். அதிலும், பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, தகாத வார்த்தைகளால் வைரமுத்துவைப் பேசியுள்ளார்.
 
இந்நிலையில், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ள வைரமுத்து, புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய நூல்களை விற்றுக் கிடைக்கும் மொத்தத் தொகையையும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்க அமைவதற்காக  நன்கொடையாகத் தர இருப்பதாக அறிவித்துள்ளார்.
 
அவரின் அறிவிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஆண்டாள் விஷயத்தில் தன்மீது ஏற்பட்டுள்ள பழிச்சொல்லை மறைக்கவே பண விஷயத்தைப் பயன்படுத்திகிறார் வைரமுத்து என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்