25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் கார்த்தி

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (17:29 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி. இவர்,  பருத்திவீரன், பையா, விருமன், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் 25 வது படமாக உருவாகியுள்ளது ஜப்பான். ராஜீ முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அணு இமானுவேல் நடித்துள்ளார்.

மேலும் சுனில், விஜய் மில்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.

'ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர்  நேற்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

முதல் காட்சியிலேயே வங்கியில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரராக ஜப்பான் என்ற கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். அவரை நான்கு மாநில காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவர் காவல்துறையினரிடம் பிடிபட்டாரா அல்லது  கடைசி வரை தப்பித்து சென்றாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த நிலையில், தனது 25 வது படம் தீபாவளிக்கு ரிலீஸாவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கவுள்ளார் கார்த்தி.  இதற்கான ஏற்பாடுகளை கார்த்தி செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்