சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து..! லியோ சிங்கமா? பூனையா? - லியோ திரை விமர்சனம்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (17:24 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர் பார்ப்பில் வெளிவந்த   திரைப்படம் "லியோ"


 
இத்திரைப்படத்தில் த்ரிஷா,கெளதம் மேனன்,மன்சூர் அலி கான்,சஞ்சய் தத், அர்ஜுன்,மிஷ்கின், சாண்டி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஊருக்குள் அத்துமீறி நுழைந்த ஹைனா விலங்கு ஒன்றை காபி பேக்கரி ஒணரும் விலங்கு நல ஆர்வலருமான விஜய் (பார்த்திபன்) மடக்கி பிடித்து அதனை தத்தெடுத்து வளர்க்கிறார்.

மிஷ்கின் மற்றும் சாண்டி இருவரும் ஊரில் பல சம்பவங்களை செய்து விட்டு பார்த்திபன் பேக்கரிக்கு வர,பிக் பாஸ் ஜனனியையும் தனது மகளையும் காப்பாற்ற துப்பாக்கி எடுத்து இருவரை மட்டுமின்றி அவர்களுடன் வந்த பலரை சுட்டு தள்ளுகிறார்.

அதற்காக,தனே முன் வந்து சரண்டர் ஆகிறார் விஜய்(பார்த்திபன்) வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற பின் நிரபராதி என்று தீர்ப்பளித்து வெளியே வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களின் புகைப்படம் வெளியில் வர

விஜய்யின் போட்டோவை பார்த்து  தன் மகன் லியோ கிடைத்து விட்டான் என ஆண்டனி தாஸ் தனது படையுடன் விஜய்யை  தேடி வருகிறார்.

பார்த்திபன் தான் நான் லியோ இல்லை என பலமுறை சொல்லியும் நம்பாமல் நடக்கும் மோதலில் அனைவரையும் பார்த்திபன் போட்டுத் தள்ளி தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அவர் தான் லியோவா? இல்லையா  என்பது தான் படத்தின் கதை விஜய்யின்  நடிப்பு இதுவரை இல்லாத நடிப்பில்  மிரட்டியுள்ளார்.

விஜய் இந்த வயதிலும் எந்தளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார் என்பதை முதலில் வரும் ஹைனா சண்டையில் இருந்து கடைசியில் அர்ஜுன் உடன் போடும் சண்டை காட்சி வரை லோகேஷ் கனகராஜ் ஹைலைட் செய்து காட்டியிருப்பது சிறப்பு. மனைவியாக நடித்திருப்பதை விட இரு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருக்கும் த்ரிஷா  நடிப்பில்  அசத்தியுள்ளார்.

நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜார்ஜ் மரியன் எமோஷனல், அப்பா அண்டனி தாஸ் சஞ்சய் தத், சித்தப்பா ஹரோல்ட் தாஸ்(அர்ஜுன்)
கெளதம் மேனன், மன்சூர் அலி கான், ஆகியோர்கள் தங்கள் கதாபாத்திரத்கேற்றார் போல்  போல் சிறப்பாக நடித்துள்ளனர். பின்னணி இசையில் அனிருத் பட்டையை கிளப்பியுள்ளர்.

ஆக்‌ஷன் காட்சிகளை அதகளப்படுத்தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை எடுத்துக் காட்டுகிறேன் என்றும் அதில்,எல்சியூவை எப்படி கனெக்ட் செய்வது என லோகேஷ் கனகராஜ் பண்ண விஷயம் பாராட்டுக்களை அள்ளியுள்ளது.

மொத்தத்தில்  விஜய் ரசிகர்களை குஷி படுத்தியியுள்ளது   இந்த"லியோ"

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்