அஜித்தின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிக்கின்றதா? மருமகன் ஆதிக் முயற்சி?

Mahendran

செவ்வாய், 1 ஜூலை 2025 (16:42 IST)
நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படமான AK64-ஐ தயாரிக்கும் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அஜித்தின் சொந்த செலவிலேயே இந்த ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சூழலில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்னும் உறுதிசெய்யப்படாததால், சிவாஜி குடும்பத்து மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன், சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே ஐந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அதில் ஒன்றாக அஜித் படத்தையும் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
அஜித் நடிப்பில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'அசல்' திரைப்படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, சுமாரான வசூலையே கொடுத்தது. இந்த நிலையில், இப்போது அஜித்துக்கு இருக்கும் மார்க்கெட்டில், அஜித்-ஆதிக் கூட்டணியில் ஒரு படம் தயாரித்தால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்