தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் வெளியாகும் நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் காலை 7 மணிக்கு லியோ திரைப்படம் திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்திருந்தார்.