ரி ரிலீஸுக்கு தயாராகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:48 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். பருத்திவீரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டுபடங்களுக்குப் பிறகு குறைந்த காலத்தில் கமர்ஷியலாக உருவாக்கப்பட்டது பையா திரைப்படம்.

மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பையா. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இப்போது தமிழ் சினிமாவில் ரி ரிலீஸ் சீசன் என்பதால் பல ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது கார்த்தியின் பையா படமும் ரி ரிலீஸ் ஆக உள்ளதாக அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்