இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு கேப்டன் மில்லர் படத்தோடு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அயலான் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக தனுஷின் கேப்டன் மில்லர் ஒரு நாள் முன்பாக ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.