மணிகண்டனின் லவ்வர் படத்தை ப்ரமோட் செய்யும் ஏ ஆர் ரஹ்மான்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:05 IST)
கடந்த மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்த குட்னைட் இந்த ஆண்டின் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் குட்னைட் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபுராம் வியாஸ் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு லவ்வர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் டீசர் வெளியானது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெலகாத” என்ற பாடலின் வீடியோவை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இணையத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்