ஜப்பான் படத்தை ரசிகர்களுடன் காண தியேட்டருக்கு வந்த கார்த்தி!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:07 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி.  இவரது 25 ஆவது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கிய  நிலையில், இப்படம்   இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

தீபாவளியையொட்டி  ரிலீஸாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் ஜப்பான் படத்தைக் காண நடிகர் கார்த்தி வருகை தந்துள்ளார். 

இன்று  முதல் 15 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது அரசு.

முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும் சிறப்புக் காட்சியோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு  அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்