என் இமேஜை ஜிகர்தண்டா 2 திரைப்படம் உடைக்கும்… ராகவா லாரன்ஸ் நம்பிக்கை!

வியாழன், 9 நவம்பர் 2023 (09:41 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 10 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் “இந்த படத்தில் பழங்குடியின மக்கள் பின்புலத்தில் ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ளோம்.  ஜிகர்தண்டா முதல் பாகத்திலேயே என்னைதான் நடிக்க கேட்டார். ஆனால் அப்போது நான் தெலுங்கு படத்தில் நடித்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. இரண்டாம் பாகத்தில் நானாகவே கேட்டு நடித்துள்ளேன்.  எஸ் ஜே சூர்யாவோடு நடித்தது சிறப்பான அனுபவம். என் மீதுள்ள பேய் பட இமேஜை இந்த படம் உடைக்கும்” என நம்பிக்கையாக பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்