மாதவிடாய் நாட்களில் கூட ஓய்வில்லை… கங்கனா ரனாவத் டிவீட்!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:08 IST)
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து டிவீட் செய்துள்ள கங்கனா ரனாவத் ‘டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. 2021-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் என்னுடைய மாதவிடாய் நாட்களில்  கூட ஓய்வு இல்லை. இதை சொல்லி நான் புலம்பவில்லை. உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்